Wednesday, April 7, 2010

நானும் பதிவு எழுத போறேன் ...நானும் பதிவு எழுத போறேன் .

ரொம்ப நாளா எனக்கும் பதிவுலகத்தில் பதிவு எழுதனும்னு ஆசை .ஒரு தடவை அண்ணன் கேபிள் சங்கர் கூட  ரொம்ப வற்புறுத்தி பதிவு எழுத சொல்லி கேட்டார் (????)( ஒரு தடவ பேச்சு வாக்குல  பதிவு எழுத சொல்லி சொன்னாரு )அதற்கு ரொம்ப படிச்சு இருக்கணும் .நமக்கு எதுக்கு இந்த வேலைன்னு விட்டுட்டேன் .ஆனா இப்போ இருக்கற blog  எல்லாம் படிச்சு பார்த்த பிறகு நாமளும் பதிவு எழுதலாம்னு (எழுதியே கொல்லலாம்னு )முடிவு பண்ணிட்டேன் .(நானும் பதிவு எழுத போறேன்...!!!.நானும் பதிவு எழுத போறேன்...!!!.)

சரி பதிவு எழுதலாம்னு முடிவு பண்ணியாச்சு (ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன் என் பேச்சை நானே கேக்க மாட்டேன் !!!!!!) எத பத்தி எழுதறதுனு தான் தெரியல ....அப்போ தான்  TV ல சிவப்பதிகாரம் படம் பார்த்தேன் (என் நேரம் அப்படி ..).அதுல விஷால் சொல்லுவார் " நாம எதாவது செய்யணும் சார் " ..அப்போ முடிவு பண்ணேன்  இந்த சமூகத்துக்கு நாம எதாவது பண்ணனும்னு (இவரு ஷங்கர் பட ஹீரோ ???????)அதான் blog பக்கம் வந்து சமூகத்துக்கு(அதாங்க society ) எதாவது பண்ணலாம்னு (நீ பதிவு எழுதாம இருந்தாலே சமூகத்துக்கு பெரிய உதவி ).

 சரி ok இப்போ மேட்டர் கு வரேன் ....

இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்
"நானும் பதிவு எழுத போறேன் ...நானும் பதிவு எழுத போறேன்"
என்னுடைய பதிவில் ஏதும் குற்றம் குறைகள் இருந்தால் பின்னூட்டம் மட்டும் இடுமாறு கேட்டுகொள்கிறேன் ( ஆட்டோ லம் பிடிச்சி வந்து அடிக்க வேணாம் )

என்னுடைய முதல் பதிவு "தண்ணீர் தண்ணீர் "
next அதுல மீட் பண்றேன் .....

1 comment:

  1. dear kalil,


    thanks for visit my page and your comments...

    ReplyDelete